தர்மபுரி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் கூட்டம் அலை மோதல்

                   தனியார் பேருந்துகள் கூட்டம் அலை மோதல்தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரசு பஸ்கள் ஓடவில்லை. அதிகாலை 4 மணிக்கு தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதன் பிறகு தர்மபுரியில் இருந்து சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு,காரிமங்கலம்,பொம்மிடி, தர்மபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே 230 ரூட்களில் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அனைத்தும் இன்று நிறுத்தப்பட்டன.

தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு பாப்பிரெட்டிபட்டி செல்ல ஒரு பஸ் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. மற்ற எந்த அரசு பஸ்களும் ஓடவில்லை. டவுன் பஸ்கள் மற்றும் ரூட் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 380 பஸ்கள் உள்ளன. ரூட் பஸ்கள் 209, டவுன் பஸ்கள் 151ஆகும். ஸ்பேர் பஸ்கள் 20 ஆகும். ஒரு பஸ்சை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் இயங்கவில்லை என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular