கொடைகானல்


                கொடைகானல்கொடை-பரிசு, கானல்-அடர்த்தியான காடு

"மலைகளின் இளவரசி"
"கிழக்கு பகுதியின் சுவட்சர்லாந்து"
"கோடையின் சொர்கம்" என்றெல்லாம் அழைக்கப்படுகிறத்.


எழில் பொங்கும் சுற்றுலா தலம் ,திண்டுக்கல் நகராட்சியில் அமைந்துள்ளது,22 .து கிமீ நிலபரப்பு கொண்ட நகரம்.
கடல் மட்டத்திலிருந்து 2133 மீ (6998 அடி) உயர்தது. இது பார்ப்பர் குன்டர் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகுதி :27,822 (2001)
கல்வியரிவு 87.3% இது தேசிய கல்வியரிவு சராசரியை விட அதிகம்.

புராண வரலாறு :
 • புராணக் காலத்தில் வாழ்ந்த தலைவன் தலைவிக்கு குழந்தை வரம் இல்லாததால் கோடை மலையை நோக்கி வேண்டினாற்கள்சில நாட்கள் கலித்து மலை பாதையோரம் சென்றுகொண்டு இருகும் போது மரப்புதர்களுக்கு இடையில் ஒரு குழந்தையை கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்கள் அவளுக்கு வள்ளி எனப் பெயரிட்டு வளத்து வந்தார்கள், அவள் மலைகளில் தேன் சேகரிப்பவள் கடவுள் முருகனுக்கும் வள்ளிக்கும் காதல் மலர்ந்தது இருவரும் மணம் முடித்து கொள்கிரார்கள், இது அப்போது குறிஞ்சி நிலம் என அழைக்கப்பட்டது.


கோடையின் பெருமை பற்றி சங்க நூல்கள்:

தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
                                                   -புறநானூறு (205)

வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
                                                    -அகநானூறு (13)

சங்க வரலாறு:

 • சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன் ,கொங்கு வேட்டுவக்கவுண்டர் இனத்தவர். 
 • பண்ணிஎன்பவன்இந்தநாட்டைத்தாக்கிவென்றுவேள்விசெய்தான்.  .
 • சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் பாலையர்கள் அவர் வாழ்ந்த போது பயன் படுத்திய மண் பானைகள், சில சுவடுகள் தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளனர்.இவை அனைத்தும் சென்பகனூர் ம்யூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.


கோடையின் வரலாறு :


இப்பகுதியை  14 நூற்றாண்டில் கண்ணுவர் வெள்ளாலன் கட்டுபாட்டில் இருந்தது,பிறகு 1821 லெப்டினன்ட் பி. . வார்டு என்பவர் வெல்லகவி என்னும் பகுதியை பார்வையிட்டார்,1845 மதுரை மற்றும் சில இடங்களில் இருந்த ஐரோப்பியர்களும் , அமெரிக்கற்களும் வெப்ப ,சலனதனதினால் பல நோய்களுக்கு இன்னல் பட்டனர், அதனால் இப்பகுதிக்கு நகர்ந்தனர்  1853 -ல் தான் முதல் கிரிஸ்த்துவ கோவில் கட்டபட்டது. போக்குவரத்திற்கு போதிய வசதி இல்லாததால் குதிரை களில் சவாரி செய்தனர், பின்னர் 1914 ல் தான் கூலிகளின் கடின உழைப்பால் முழுமையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டது.
 • 1875 ல் முதல் தொடர்வண்டி சென்னை - கொடை (598 கி.மீ) நிலையம் அம்மை நாயக்கனூர் 80 கி.மீ தொலைவில் நிறுவினார்கள், இது தற்போது கொடை ரோடு என அழைக்கப்படுகிறது, இது கொடைக்கானலை மிகவும் பிரபல படுத்தியது.
 • 1916 களில் தான் இங்கு பள்ளிகள் நிறுவப்பட்டது.
 • கொடைகானலில் தட்பவெப்பநிலை காய்கறிகள் மற்றும் பழவகைகள் விளைய உதவுவதால் இங்கு புத்துணர்சியான மற்றும் தரமான காய்கள் பழங்கள் கிடைக்கிறது. உருழை கிழங்குகள் அதிக அளவில் கொல்முதல் செய்கிறார்கள்.பேரிக்காய்,திராட்சை,பிளம்ஸ் பழவகைகள் இங்கு பிரபலம்.
 • தேயிலை தோட்டம் தவிர பழத்தோட்டம்,பூந்தோட்டம், ப்ளூ கம் தோட்டம், யூகேளிப்டஸ் மரங்கள்,பைன்கள்,வேலித்தட்டி தோட்டங்களும் உள்ளது.
 • வாசம் மிகுந்த மடோனா லில்லிஸ், ஊமத்தைகள்,டாக்லியாஸ் போன்ற பூக்கள் இருந்தாலும் குறிஞ்சி பூக்கள் தான் பிரபலம் பண்ணிரட்டு ஆண்னுக்கு ஒருமுறை பூக்கும் இந்தப் பூக்கள், அன்மையில் 2006 ஆம் ஆண்டு பூத்தது. இதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் என்னும் பெயரும் உண்டு.
 • சந்தன மரங்கள், மூங்கில்கள், தேக்கு மரங்கள், அர்சுனா மரம், ரோஸ்உட் போன்ற மரங்களும் உள்ளது.
 • இங்கு பச்சலை, மூக்கிரட்டை , அஸ்வகந்தா, வின்னிலை,புளியரை போன்ற மருந்து தாவரங்களும் அதிக அளவில் உள்ளது. 
விவசாயம் செய்யப்படும் இடங்கள்:
 • சென்பகனூர்,பெருமாள்மலை,வில்பட்டி,பூம்பாரை,ஆட்டுவம்பட்டி,மதி மயக்கன் சோலை.


கொடைகானலின் சிறப்பம்சங்கள்:

 • பிரையண்ட்பார்க் 
 • தொலைநோக்கிக்காப்பகம்மற்றும்கோக்கர்ஸ்வாக்
 • தூண் பாறைகள்
 • கொடைக்கானல் ஏரி
 • பேரிஜம் ஏரி
 • கவர்னர் தூண்
 • கோக்கர்ஸ் வாக்
 • அப்பர் லெக்
 • குணா குகைகள்
 • தொப்பித் தூக்கிப் பாறைகள்
 • மதி கெட்டான் சோலை
 • செண்பகனூர் அருங்காட்சியம்
 • 500 வருட மரம்
 • டால்பின் னொஸ் பாறை
 • பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
 • பியர் சோலா நீர்வீழ்ச்சி
 • அமைதி பள்ளத்தாக்கு
 • குறிஞ்சி ஆண்டவர் கோயில்
 • செட்டியார் பூங்கா
 • படகுத் துறை
 • வெள்ளி நீர்வீழ்ச்சி
 • கால்ஃப் மைதானம்
 • கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.

 • கொடைக்கானலில் கிராமங்கள் அதிகமாக இருக்கின்றன.

2 comments:

Popular