வில்லன் நடிகருடன் இணையு பிக் பாஸ் ஓவியா.

                 வில்லன் நடிகருடன் இணையு பிக் பாஸ்  ஓவியா.பிக் பாஸ்.நிகழ்ச்சி மூலம் பெரும் புகழையும், வரவேற்பினையும் அடைந்த ஓவியா தற்போது வில்லன் நடிகர் அசன்பாலுடன் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருக்கு பல வாய்ப்புகள் வந்த நிலையில், தற்போது ஓவியா ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா -3 படத்தில் நடித்து வருகிறார். தன்னை தேடி வந்த பல படங்களை ஓவியா தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வில்லன் நடிகர் ஒருவருடன் நடிக்க இருக்கிறார். ‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அசன்பால். இவர் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருடைய ஜோடியாக ஓவியா நடிக்கிறார். அசன்பாலும் ஓவியாவும், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பதும, ஒரே பகுதியில் வசிக்கும் இவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள்எ ன்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஓவியா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி உள்ளனர்..

No comments:

Post a Comment

Popular